Sunday, February 09, 2014
இலங்கை::பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் ஆகியோர், ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப தினத்திலேயே இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் விசேட உரையை நிகழ்த்துவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உரையாற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உரை நிகழ்த்துவார்.
இதன் போது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளை கருத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடந்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் உரைநிகழ்த்த உள்ள நிலையில், அவர் இதன் போது அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிப்பார் என்று எதிபார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த பிரேரணைக்கு பிரித்தானியா ஏற்கனவே ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் உரையாற்றவுள்ளார்.
முன்பிருந்த அவர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமது உரையிலும் இதனை மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment