Pages

Saturday, February 8, 2014

பெற்றோரை பிரிந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த சிறார்கள் மூவர் பெற்றோர்களிடம் மீளவும் ஒப்படைப்பு!

Saturday, February 08, 2014
இலங்கை::போர்க்காலத்தில் பெற்றோரை பிரிந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த சிறார்கள் மூவர் பெற்றோர்களிடம் மீளவும் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
இறுதிப் போரின் போது பெற்றோர்களைப் பிரிந்திருந்து, நலன்புரி முகாம்களிலிருந்து சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டு உறவினர்களின் தொடர்புகளை இழந்திருந்த சிறுவர்கள், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளால் தரவுகள் பெறப்பட்டு அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று பெற்றோர்களிடம் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியினால் கையளிக்கப்பட்டனர்.
 
கடந்த போரின் போது 700க்கும் மேற்பட்ட சிறார்களைக் காணவில்லை எனத் தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், 56 பேர் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இவர்களில் மூவரே பெற்றோர்களிடம் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளுக்கான உதவிகளை வட மாகாண ஆளுநர் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்திருப்பதாக தெரியவருகிறது. இந்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment