Pages

Wednesday, February 12, 2014

சாட்சிகள் மற்றும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டங்கள் விரைவில் அமுல்!


 Wednesday, February 12, 2014
இலங்கை::சாட்சிகள் மற்றும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டங்கள் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் விசேட சட்ட மூலத்தை உருவாக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக சட்டவாக்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. வரைவுத் சட்டம் நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

யுத்த காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டம் மிகவும் அவசியமானது என சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் தடவையாக இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இந்த சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த ஆர்வம் காட்டவில்லை.

உரிய நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத காரணத்தினால் குறித்த உத்தேச சட்டம் பற்றிய விடயங்கள் கிடப்பில் போடப்பட்டன. அதன் பின்னர் புதிதாக சட்டமொன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது. சர்வதேச அழுத்தங்களின் காரணமாக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது. விரைவில் இ;ந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment