Pages

Friday, February 21, 2014

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை : சோ கருத்து!

Friday, February 21, 2014
சென்னை::ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்வது என, முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு, அரசியல் ரீதியானது என, பத்திரிகையாளர் சோ ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில்,  புலிகள் இயக்கத்துக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து எழுதியும், பேசியும் வருபவர் சோ. புலிகள் இயக்கம் வலுவாக இருந்த காலம் தொட்டு, அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்த, மூத்த பத்திரிகையாளரான இவர், தற்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து, விமர்சிக்க விரும்பவில்லை என, மறுத்து விட்டார்.
 
ஆனாலும், "இது ஒரு அரசியல் முடிவு என்பது மட்டும் என்னுடைய கருத்து என்றும், இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை' என்றும் கூறினார்.

No comments:

Post a Comment