Tuesday, February 11, 2014
இலங்கை::பல்வேறு வகையிலும் எமது நாட்டின் விவகாரங்களில் தலையிட்டுவரும் சர்வதேச சக்திகள்
தற்போது தெற்கு மக்களின் மனித உரிமையும் மீறப்படுவதாக கூறி அவர்களையும் தவறான
வழியில் திசைதிருப்ப ஜெனீவாவிலிருந்து சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மக்களின் மனித உரிமை பற்றி மட்டும் குரல் எழுப்பினால் தெற்கு மக்களின்
ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகலாம் என்ற நோக்கத்திலேயே அவர்கள் அவ்வாறு
செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக
உள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களுக்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ள அரசாங் கத்திற்கும், முப்படை
யினருக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர்
தெரிவித்தார். காலி மாவட்டத்திற்கு நேற்றையதினம் வருகைதந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்கள் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை
ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து உடுகம நகரில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
காலி மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல பகுதிகளிலும் பல்வேறு அபிவிருத்தித்
திட்டங்களை நான் ஆரம்பித்து வைத்துள்ளேன். இப்போது காலி மாவட்டத்தில் பெரும்பாலான
வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. உடுகம- காலி வரையிலான 35 கிலோமீற்றர் பாதை
4642 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இப்பகுதியில் தேயிலை,
ரப்பர், போன்ற துறைகளை முன்னேற்றுவதற்காக வரவுசெலவுத்திட்டத்தில் நிதி
ஒதுக்கியுள்ளோம்.
நாம் தேயிலைக்கு சிறந்த விலையினை வழங்கி வருகின்றோம். இத்துறைகளைப் பாதுகாப்பது
மக்களின் பொறுப்பாகும். மழை, வெள்ளம் காரணங்களினால் பாதிக்கப்படும் தேயிலையைப்
பாதுகாக்க நாம் தொடர்ந்தும் நிதியினை வழங்கி வருகின்றோம். ரப்பர் மற்றும் தேயிலை
ஊடான பொருளாதாரத்தை மென்மேலும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம்
மேற்கொண்டுள்ளோம். அத்துடன், இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்தவும் நாம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.
எனினும், இத்துறைகளை சீரழிப்பதற்கு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு
வருகின்றனர். அவர்கள் ரப்பர் தொழிற்சாலைகளை அழிக்கப் பார்க்கின்றனர். இதன் ஒரு
நடவடிக்கையாக பல தொழிற்சாலைகள் தற்போது மூடிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில
சக்திகள் மிக மோசமாக தமது அரசியல் லாபத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை
வீழ்ச்சியுறச் செய்வதற்கு முயற்சிக்கின்றன.
பெருமளவு வெளிநாட்டுப் பணத்தைக்
கொண்டுவந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நாம் ஒருபோதும் இத்தகையை
நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை. இதனை மக்கள் உணரவேண்டும். இது உண்மையில்
மக்களின் விருப்பத்துடன் இடம் பெறுகின்றதா என்பதே எனது கேள்வி. சில சக்திகள்
மக்களைத் தூண்டிவிட்டு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பார்க்கின்றன.
தற்போது வெளிநாட்டு செய்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருகின்றன.
இவர்கள் மனித உரிமை மீறப்படுவதாகக் கூறி வருகின்றனர். வடக்கு மக்களின் மனித உரிமைகள்
தொடர்பில் மட்டும் குரல் எழுப்பினால் தெற்கு மக்களின் ஆதரவை பெறமுடியாமல் போகும் என
நினைத்து செயற்படும் அவர்கள், இப்போது தெற்கு மக்களின் மனித உரிமையும் மீறப்படுவதாக
ஒரு புரளியை ஏற்படுத்தி வருகின்றனர். அப்போது தான் அமெரிக்கா, இங்கிலாந்து
போன்றவற்றின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என கருதியே அவர்கள் இவ்வாறு
செயற்படுகின்றனர். இத்தகைய ஒரு கூற்றை நேற்று ஜெனீவாவில் வெளியிட்டுள்ளதையும் நான்
குறிப்பிட விரும்புகிறேன்.
சிலருக்கு வெளிநாட்டுத் தூதரகங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் மூலம் சில
செயற்பாடுகளுக்காக உதவி வருகின்றன. அவ்வாறு செயற்பட வேண்டாம் என நாம் அவர்களைக்
கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நாட்டில் எம்மை சுதந்திரமாக நிம்மதியாக வாழவிடுங்கள் என நாம் கேட்டுக்கொள்கிறோம். எமது நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம். மக்களுக்கு அரசியல் செய்யவும், மக்கள் தமது தலைவரைத் தெரிவு செய்யவும் இடமளியுங்கள். மக்கள் தமது நடவடிக் கைகளை தடையின்றி
எமது நாட்டில் எம்மை சுதந்திரமாக நிம்மதியாக வாழவிடுங்கள் என நாம் கேட்டுக்கொள்கிறோம். எமது நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம். மக்களுக்கு அரசியல் செய்யவும், மக்கள் தமது தலைவரைத் தெரிவு செய்யவும் இடமளியுங்கள். மக்கள் தமது நடவடிக் கைகளை தடையின்றி
மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளியுங்கள் என நான்
கேட்டுக்கொள்கின்றேன்.
பெரும் சவால்கள், கஷ்டங்களுக்கு மத்தியில் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.
தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும்
வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். சிலர் அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு
எதிராகவும் செயற்பட்டு வருகின்றனர். நாம் மக்களுக்கான அனைத்தையும்
பெற்றுக்கொடுத்துள்ளோம். எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே
உள்ளோம். மக்கள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டை முன்னேற்றிச் செல்லும்
நடவடிக்கைகளில் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்.
சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த காலங்களில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி
செயற்றிட்டங்கள்போல குறுகிய நான்கு வருடங்களில் ஐந்து மடங்கான செயற்றிட்டங்களை நாம்
நடைமுறைப் படுத்தியுள்ளோம்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இன்று சகலரும் சுதந்திரத்தை அனுபவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியையும், படைவீரர்கள் ஞாபகார்த்த வெற்றிவிழாவையும் தெற்கில் காலி,மாத்தறை நகரங்களில் நடத்த தீர்மானித்துள்ளோம். இம்முறை சிலாபம், கேகாலை பகுதியில் தேசத்துக்கு மகுடம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த முறை தெற்கையும், மொனரா கலையையும் இணைத்துக்கொண்டு இதனைச் செயற்படுத்தவுள்ளோம்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இன்று சகலரும் சுதந்திரத்தை அனுபவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியையும், படைவீரர்கள் ஞாபகார்த்த வெற்றிவிழாவையும் தெற்கில் காலி,மாத்தறை நகரங்களில் நடத்த தீர்மானித்துள்ளோம். இம்முறை சிலாபம், கேகாலை பகுதியில் தேசத்துக்கு மகுடம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த முறை தெற்கையும், மொனரா கலையையும் இணைத்துக்கொண்டு இதனைச் செயற்படுத்தவுள்ளோம்.
மக்களின் தேவைகளை அறிந்து நாம் முன்னோக்கிச் செல்லவேண்டியுள்ளது. அதற்கான தலைவர்கள்,
தலைமைத்துவம் எம்மிடம் உள்ளது. இதற்கான பொறுப்புக்களை மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
அமைச்சர்கள் ரோஹித்த அபேகுண வர்த்தன, பியசேன கமகே, பிரதியமைச்சர் நிஷாந்த
முத்துஹெட்டிகம உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட் டிகமவின் இணையத்தளமொன்றையும் ஜனாதிபதி
இந்நிகழ்வின்போது ஆரம்பித்து வைத்தார்.
No comments:
Post a Comment