Thursday, February 6, 2014

புலிகளின் அரசியல் பிரிவே தமிழ் தேசிய கூட்டமைப்பு: புலிகளை அழித்த உடனேயே கூட்டமைப்பை தடைசெய்யாதது நாம் செய்த தப்புசரத்­வீ­ர­சே­கர!

Thursday, February 06, 2014
இலங்கை::புலிகளின் அரசியல் பிரிவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவே
நாங்கள் செய்த தவறு யுத்தத்தில் புலிகளை அழித்தவுடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்யாததன் பிரதிபலனையே இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என பிரதி அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார் .
 
அம்பாறை மாவட்ட தமிழர் அபிவிருத்தி வாழ் உரிமை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி காணி தொடர்பாக தமிழ் புத்திஜீவிகள் பிரதி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு சனிக்கிழமை அம்பாறை ஆரியவான் உல்லாச விடுதியில் ஒன்றியத்தின் தலைவர் எஸ் . சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது இதன் போது அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் சரத்வீரசேகர இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து பேசுகையில் ,
 
கடந்த 35 வருடம் கடற்படையில் 28 வருடம் கடலில் எனது வாழ்கையும் 4 வருடங்கள் சிவில்பாதுகாப்பு படையிலும் பின்னர் அரசியலில்வந்துள்ளேன் . இந்த நிலையில் இலங்கை வரலாற்றை மாத்திரமல்ல உலகவரலாற்றை எடுத்துபார்த்தால் தற்கொலைக் குண்டுதாக்குதலுக்கு இலக்கான ஒரே ஒரு கடற்படை வீரர் நானே என்னை அழிப்பதற்கு எனது கடற்படை கப்பலை தாக்குவதற்காக பிரபாகரன் 1990 ஆண்டு யூலை 5 ம் திகதி 3 தற்கொலை குண்டுதாரிகளையும் படகுகளையும் அனுப்பிவைத்தார் தற்கொலை படகு வெடித்ததில் என்னுடன் பால்சோறு உண்ட 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததுடன் வெடிப்பில் ஏற்பட்ட வெப்பமே அதிகமாக இருந்தது
 
கடலில் யுத்தம் செய்யும்போது கடல் புலிகள் 3 பேர் இறந்து விடுவார்கள் ஏனையவர்கள் தப்புவதற்காக கடலில் குதிப்பார்கள் அவர்களை நாங்கள் வலைபோட்டு இலகுவாக பிடித்து உணவு உடை வழங்கி இராணுவத்திடம் ஒப்படைப்போம் ஆனால் புலிகளால் கைதுசெய்யப்பட்ட எமது படைவீரர்களை நாங்கள் பெறுவதற்குச் சென்றபோது அவர்களது கண்ணை குத்தியும் கை கால்களை உடைத்து நாக்கு மற்றும் அந்தரங்க உறுப்புக்களை அறுத்து அனுப்பிய நிலமையைத்தான் கண்டோம் .

2009 ம் ஆண்டு மே 17 ம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது. அதற்கு முதல் மே 7ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனை சுற்றி 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் வைக்கப்பட்டதுடன் சுற்றிவர பங்கர் வெட்டி கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டு றிமோட்கொன்ரோல் பொருத்தியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 300 படைவீரர்களை அனுப்பியபோது அதில் 220 இராணுவத்தினர் கை கால்களை இழந்த நிலையில்.....நாங்கள் பீரங்கியினைப் பயன்படுத்தி அழித்திருக்க முடியும் ஆனால் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பதால் பின்னர் சென்ற படையினரே பிரபாகரனைச் சுற்றிவைக்கப்பட்ட பொதுமக்களை காப்பாற்றினோம்.

இவ்வாறு தான் நாங்கள் மனித உரிமைகளை பாதுகாத்தோம். ஆனால் புலிகள் எவ்வாறு மனித உரிமைகளை காப்பாற்றினார்கள் என்பதன் வித்தியாசம் இதன் மூலம் தெரியும்.

இந்த யுத்தத்தின்போது 28 ஆயிரம் படை வீரர்கள் உயிரிழந்தும், 14 ஆயிரம் படை வீரர்கள் கை, கால்களை இழந்து அங்கவீனர்களானார்கள்.

இந்நிலையில் தமிழ்மக்களை காப்பாற்றாமல் போயிருந்தால் இதில் 25 வீதமான படையினரை இழந்திருக்க முடியாது.

அதேவேளை கடற்படைகளின் பிரதான எதிரியான புலிகளின் தளபதி சூசையின் மனைவி இரு பிள்ளைகள் அன்று கடலில் படகில் வந்தபோது அவர்களை கைது செய்தமை தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், கடற்படைத் தளபதி ஆகிய மூன்று பேருக்கும் மட்டுமே தெரியும். இவர்களை இலகுவாக அழித்திருக்க முடியும் ஆனால் நாங்கள் மனித உரிமைகளை பாதுகாத்தது இவ்வாறான வகையில்தான்.

கடற்படையின் கட்டளைத் தளபதியாக 2002 ம் ஆண்டு இருந்தபோது வடக்கில் 200 மாணவர்களை கட்டாயமாக புலிகள் பயிற்சி கொடுத்தபோது அதனை எதிர்த்த இரண்டு அதிபர்களை புலிகள் கொலை செய்தது. அதனை நான் நேரில்கண்டோம். அவ்வாறே தமிழ் தலைவர்களை புலிகள் அழித்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்கவில்லை எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஹிட்லரின் அரசியல் பிரிவு முழுமையாக அழிக்கப்பட்டது. எகிப்தின் முபாரக் நிறுத்தப்பட்டபோது அந்த அரசியல் கட்சி கலைக்கப்பட்டது.

சதாம் உசைன் இறந்த பிறகு அவரின் அரசியல் கட்சி கலைக்கப்பட்டது. யுத்தத்தின் பின் நாங்கள் செய்த ஒருதவறுதான்  புலிகளை அழித்தவுடனேயே புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடைசெய்யாததின் பிரதிபலனேயே இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கு எதிர்காலத்தில் மக்கள் முடிவு எடுப்பார்கள் என்றார். பிரதி அமைச்சர் சரத்வீரசேகர

No comments:

Post a Comment