Friday, February 07, 2014
இலங்கை::பொலிஸ் நிலையங்களுக்கு வரும் அனைத்து முறைப்பாடுகளையும் பொலிஸார் பதிவு செய்யவேண்டும் என்றும், எவ்வாறான முறைப்பாடுகள் என்றாலும் அவற்றினை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்ப முடியாது என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமல சேன தெரிவித்துள்ளார்.
இன்று யாழ். மாவட்ட பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் நிலையத்திற்கு முறையிட சென்ற சிலர் திருப்பி அனுப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பொலிஸ் நிலையங்களுக்கு வரும் அனைத்து முறைப்பாடுகளையும் பொலிஸார் பதிவு செய்யவேண்டும் என்றும், எவ்வாறான முறைப்பாடுகள் என்றாலும் அவற்றினை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்ப முடியாது.
பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் பொலிஸார், அதற்கு மறுப்புத் தெரிவித்தால் அது தொடர்பில் மேலதிகாரிகளிடம் சம்பவம் தொடர்பில் முறையிடலாம் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment