Pages

Thursday, February 20, 2014

வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளி குறைபட குறைய வேண்டும்: வாசுதேவ நாணயக்கார!

Thursday, February 20, 2014 
இலங்கை::நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளி குறைபட வேண்டிய அதே நேரம், அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமெனவும் தேசிய மொழிகள் மற்றும்

சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு சமூக தரத்தில் முன்னெடுக்கப்படும் அதே நேரம் அரசியல் தரத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் இன ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டுக்கான மாநாடு ஏப்ரல் மாதம் 7ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் குமார் ரூபசிங்க கருத்து தெரிவிக்கையில், நாட்டின் சமூக ஒருமைப்பாட்டுக்கு மொழிப் பிரச்சினையே பாரிய அச்சுறுத்தலாக இருப்பதைக் கூறினார். நாம் சுதந்திரம் பெற்றது முதல் எமது தனித்துவத்தை நிலைநாட்டவே முயற்சிக்கின்றோம். எல்லா இன மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அழுத்தம் உண்டு. மக்கள் அவமானத்திற்குள்ளான போதே பிரச்சினை உருவாகியது.

வெற்றிக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு 13ஆவது அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கூறினார். முன்னாள் அரச அதிபர் தேவநேசன் நேசய்யா கருத்து தெரிவிக்கையில், நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் நாட்டின் அரசியல் யாப்பினை முழுமையாக மதிக்க வேண்டும்.

தற்போது பல விவாதங்கள் செய்கின்ற போதிலும் 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். அப்போது தான் இந்த அரசாங்கம் மக்களின் துன்பங்களை நன்கு புரிந்து கொள்வதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களென கூறினார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறுகையில், இந்த மாநாடு ஏற்கனவே செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு விடயம் என்கிற போதிலும் காலதாமதத்தை பொருட்படுத்தாது தேசிய ஒருமைப்பாட்டுக்காக எமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஒருமைப்பாட்டுக்கு அடிப்படைத் தேவை மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் பசியை போக்குவதும் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்குவதேயாகும்.

தெற்கிலுள்ள தலைவர்கள் அவற்றை பூர்த்தி செய்தால் இயல்பாகவே நாட்டில் ஒருமைப்பாடு நிலவுமென கூறினார். கிழக்கு மாகாண முன்னாள் உபவேந்தர் ஜெkமா இஸ்மாயீல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் அதன் அவசியம் ஒரு வலைப்பின்னலூடாக தொடச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரபல நடிகையும் பாராளுமன்ற உறுப்பினருமான மாலினி பொன்சேக்கா, சமாதானம் நிலவும் இக்காலத்தில் இந்த மாநாடு அவசியமெனக் கூறியதுடன் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியான சந்தோசம் +ரிசியமெனத் தெரிவித்தார். பாடகர் சந்தோஷ், பிரச்சினைகளை தீர்க்க தொடர்பாடல் அவசியம் எனக் கூறினார்.

தமிழர்கள், சிங்களத்தையும் சிங்களவர்கள் தமிழையும் கற்றுக் கொள்வதன் மூலம் எமது இளைய சந்ததியினரான நாம் இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டுடன் பெருமிதம் கொள்வோம் என இச்சந்தர்ப்பத்தில் உறுதிபூண்டார். பாடகர் பாத்திய, இதுவரையிலிருந்த அந்த இனப்பிரச்சினை எமது பெற்றோருடன் முடியட்டும். இளைய சந்ததியிரான எம்மிடையே வேண்டாம். இதற்காக இளைஞர்களாகிய நாம் ஒன்றுபடுவோம் எனவும் கருத்துரைத்தார்.

 

No comments:

Post a Comment