Pages

Saturday, February 8, 2014

வண்டலூரில் இன்று பாஜ பொதுக்கூட்டம் : நரேந்திர மோடி சிறப்புரை!

Saturday, February 08, 2014
சென்னை::தமிழக பாஜ சார்பில் வண்டலூர் விஜிபி மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பாஜ முன்னாள் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ண் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மோடி பேசுவதற்காக நாடாளுமன்ற வடிவில் 160 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள 80 அடி மேடையில் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் அமர்ந்து இருப்பார்கள்.

மேடையின் வலது புறமும், இடது புறமும் தலா 40 அடி அகல மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜ நிர்வாகிகளும் உட்கார இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அலங்கார கூரை அமைக்கப்படுகிறது. மேடை நடுவே 30 அடி அகலம் 12 அடி உயரம் கொண்ட பிரமாண்ட எல்இடி திரையும், மைதானம் முழுவதும் 10 எல்.இ.டி. திரைகளும் வைக்கப்படுகின்றன. பொதுக்கூட்ட மைதான முகப்பு செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினருடன் 10 ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

தொண்டர்கள் அமரும் வகையில் சுமார் 5 லட்சம் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒரு நோட்டு ஒரு ஓட்டு என்ற வாசகத்துடன் தொண்டர்களிடம் நன்கொடை பெறுவதற்கான ‘ஸ்டால்‘ அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக உணவு ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் வாகனங்களை நிறுத்த 13 இடங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் இருந்து வண்டலூர் வரை மின் விளக்கு, ஒலி பெருக்கி வசதி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வண்டலூர் வரை வழிநெடுக கொடி தோரணம், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் பல கோணங்களில் மோடி படங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுக்கூட்ட மேடை முழுவதும் நேற்று இரவு முதல் 7 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்ட மேடையை ஹெலிகாப்டர் மூலமும் போலீசார் கண்காணிக்கிறார்கள். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment