
Saturday, February 08, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆர்வத்துடன் செயற்படுவதாக நீதியமைச்சர் ரவ+ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்கவும், சகல இன மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ஜிஓப் டொய்ஜியை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் ரவ+ப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் , இனங்களுக்கிடையிலான விரிசலை அதிகரிப்பதோடு நல்லிணக்க முன்னெடுப்புக்களை பாதிப்பதாகவும் அமைச்சர்
சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டில் காணப்படும் தீர்வே மிகச்சிறந்ததாக அமையுமென இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசத்தின் அழுத்தங்களை விடுத்து உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாக பிரச்சினைகளை சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து தீர்ப்பதே சிறப்பாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தத்தின் பின்னர் சமாதானம் ஏற்பட்டுள்ள இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தென்னாபிரிக்கா முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் அமைச்சர் ரவ+ப் ஹக்கீம் அந்நாட்டு உயரதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment