Pages

Wednesday, February 12, 2014

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான விருப்பு இலக்கங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன!

Wednesday, February 12, 2014
இலங்கை::எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பாளர் விருப்பு இலக்கம் வழங்கல் இன்று இடம்பெற்றது.

மேல்மாகாண சபைத் தேர்தலுக்கான விருப்பு இலக்கங்கள் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்ட செயலகங்களில் இடம்பெற்றன.

களுத்துறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 13 அரசியல் கட்சிகளினதும், 9 சுயேட்சை குழுக்களினதும் 550 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் 946 வேட்பாளர்கள் விருப்பு இலக்கங்களை பெற்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சைக் குழுக்களின் 1247 வேட்பாளர்கள் விருப்பு எண்களை பெற்றுள்ளனர்.

இதேவேளை, தென் மாகாணத்தில் மாத்தறை காலி ஹம்பாந்தோட்டை செயலகங்களில் தேர்தல் விருப்பு இலக்கங்கள்
விநியோகிக்கப்;பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:

Post a Comment