Tuesday, February 4, 2014

மட்டக்களப்பு மாவட்ட செயலக சுதந்திர தின நிகழ்வுகள்!

Tuesday, February 04, 2014
இலங்கை::இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 66ஆவது சுதந்திரதின வைபவத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
 
நிகழ்வில், தேசியக் கொடியேற்றலையடுத்து, சுதந்திரத்துக்காக உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
அடுத்து சமயத்தலைவர்களான மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தா ஜீ மகாராஜ், மட்டக்களப்பு மறைமாவட்ட புனித மரியாள் பேராலய அருட்தந்தை எஸ்.ரவிகாந், மட்டக்களப்பு ஜாமில் சலாம் பள்ளிவாயல் பிரதம யேஸ் இமாம் மௌலவி எம்.ஐ.எம்.நளீம் பலாஹி ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.

அதனையடுத்து, தலைமையுரையை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நிகழ்த்தினார்.
 
இந் நிகழ்வில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட மாவட்ட செலயக அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment