Monday, February 17, 2014

உறவினர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையிலான குற்றவாளிகள் தொடர்பான முழுமையான தரவுக்கோப்பு!

Monday, February 17, 2014
இலங்கை::குற்றவாளிகளின் உறவினர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையிலான நடுநிலையாக தயாரிக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான தரவுக் கோப்பொன்றை அரசாங்மானது உருவாக்கியுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளின் உறவினர்கள் குற்றவாளிகளின் பெயர் அவர்களை தடுத்துவைத்துள்ள இடங்கள் தொடர்பான தகவல்களை பெறமுடியும்.
 
குற்றவாளிகள் தொடர்பான மற்றும் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை அவர்களது நெருங்கிய உறவிகர்கள் கொழும்பு, வவுனியா மற்றும் பூசா பயங்கரவாத விசாரனைப்பிரிவுகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
 
குற்றவாளிகளின் உறவுகளுக்காக தகவல்களை வழங்கக் கூடிய இவ் வேலைத் திட்டமானது பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்தவகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது குற்றங்கள் தொடர்பான சந்தேக நபர்கள், காணிப் பிரச்சனைகள், சட்டமும் ஒழுங்கும் சார்பான குற்றங்கள், நிர்வாகம் சார்ந்த குற்றங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியது.
 
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கடந்த 2011 ஆம் ஆண்டு விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பான குற்றச் சாட்டுகளை பரிசீளித்து அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கு முகமாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment