Sunday, February 09, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட செட்பாளையத்தினையும் அம்பிளாந்துறையினையும் இணைக்கும் பாலத்தினை அமைப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
செட்டிபாளையம் பிரதேசத்துக்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
செட்டிபாளையம் பிரதேசத்துக்கு பிரதியமைச்சர் செட்டிபாளையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,இணைப்புச்செயலாளர் திருமதி பேரின்பமலர் மனோகரராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது செட்டிபாளையம் -அம்பிளாந்துறை ஊடான படகு சேவைகள் பல ஆண்டுகாலமாக நடைபெற்றபோதிலும் அது நிறுத்தப்பட்டு தற்போது எதுவித போக்குவரத்துகளும் அற்ற நிலையில் அம்பிளாந்துறையில் இருந்து செட்டிபாளையம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்துக்கு வரும் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதால் இரு கிராமத்தினையும் எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,
படுவான்கரையினையும் எழுவான் கரையினையும் இணைக்கும் முக்கிய பாலமான மண்முனைத்துறையின் பாலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் நிலையினை அடைந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து அம்பிளாந்துறைக்கும் -செட்டிபாளையத்துக்கும் இடையில் பாலத்தினை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுப்பேன்.அதேபோன்று மண்டூர்-குருமண்வெளிக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கான பணிகளை முன்னெடுக்கப்படும்.
நாங்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே எமது பிரதேசத்துக்கான அபிவிருத்தியினை முற்றுமுழுதாக பெற்றுக்கொள்ளமுடியும்.இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரேயொரு தமிழ் அமைச்சராக இருந்து என்னால் முடிந்த அபிவிருத்திப்பணியை முன்னெடுத்துவருகின்றேன்.எதிர்காலத்திலும் முன்னெடுப்பேன்.
நாங்கள் ஆளும் கட்சியை ஆதரிப்பதால் நாங்கள் சிங்களவர் என்று சொல்லமுடியாது.நாங்கள் எங்கள் இனத்தின் இருப்பை தக்கவைக்கவேண்டுமாகவிருந்தால் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே அதனை மேற்கொள்ளமுடியும்.இன்று எம்மைவிட்டு அனைத்தும் செல்வதற்கு எமது தூரநோக்கற்ற அரசியலே காரணம் என்றார்.

No comments:
Post a Comment