Thursday, February 13, 2014

பாதுகாப்பு செயலாளரை ரஸ்யக்குடியரசின் வெளிவிவகார அமைச்சின் குழு சந்தித்தது!

Thursday, February 13, 2014
இலங்கை::ரஸ்யக்குடியரசின் வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த குழு இன்று (பெப்.12) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பாக பரஸ்பரம் கலந்துரையாடியது,
 
இக்குழுவில் மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் திரு.அனடொலி டி விக்ரோ, ரஸ்யக்குடியரசின் தூதுவர் அலக்ஷான்டர் ஏ கர்சாவா, திரு.அன்ரே ஏ மொஸ்க்வின், மற்றும் வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த திரு.சந்தன வீரசேன, திரு.எச்..வி டுல்மித் வருன மற்றும் திரு. சிந்தக்க கீர்த்திக ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment