Pages

Saturday, February 8, 2014

இலங்கையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை விட, பிரிவினை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளிநாட்டு சக்திகள்: கிரிஸ் நொனிஸ்!

Saturday, February 08, 2014
இலங்கை::இலங்கையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை விட, பிரிவினை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளிநாட்டு சக்திகள் அதிகமாக செயற்படுவதாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நொனிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல இன மக்கள் காணப்படுகின்றார்கள்.

அவர்கள் ஒற்றுயாக வாழ்வதே ஒருநாட்டின் உண்மையான செல்வம்.

ஆனால் இதற்கு மாறாக இலங்கையில் இனப்பாகுபாடுகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.

இவ்வாறான சக்திகளை முறியடிக்கக்கூடிய திறமை இலங்கை அரசாங்கத்திடம் இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment