Pages

Friday, February 14, 2014

சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, February 14, 2014
இலங்கை::சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த நிறைவின் பின்னர் அரசாங்கம் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சமூகம் காலத்திற்கு காலம் இலங்கை தொடர்பான கொள்கைகைள மாற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் இலங்கை விவகாரத்தில் உள்நோக்கம் ஓன்றுடன் செயற்பட்டு வருவகின்றமை புலனாகின்றது எனவும், அனைத்து நாடுகளினதும் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்;டுள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் இலங்கையின் விசேட பிரதிநிதிகள் தென்கொரியா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைக்கான ஆதரவினை அதிகரிக்கும் நோக்கில் ராஜதந்திரிகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள உள்ளனர்.

No comments:

Post a Comment