Pages

Saturday, February 22, 2014

வட மாகாணசபையின் தீர்மானங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும்போக்குவாதிகளினால் நிறைவேற்றப்படுகிறது: திஸ்ஸ விதாரண!

Saturday, February 22, 2014
இலங்கை::வட மாகாணசபையின் தீர்மானங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும்போக்குவாதிகளினால் நிறைவேற்றப்பட்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு தீர்மானங்களை குறித்த தரப்பினர் நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபை எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியும் என்ற போதிலும், அது தொடர்பில்  தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசஙர்கத்திற்கே காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
நேரடியாக விமான மற்றும் கப்பல் சேவைகளை முன்னெடுக்க வட மாகாணசபைக்கு மெய்யான தேவை இருந்திருந்தால், மத்திய அரசாங்கத்துடன் பேசி அதற்கான நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமான நிலையங்களோ துறைமுகங்களோ மாகாணசபைகளின் அதிகாரத்திற்கு உட்பட்டவையல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment