Saturday, February 15, 2014

சர்வதேசம் இலங்கையை தனிமைப்படுத்தக் கூடாது: அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்!

Saturday, February 15, 2014
இலங்கை::சர்வதேசம் இலங்கையை தனிமைப்படுத்தக் கூடாது என அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.
 
இலங்கையில் சமாதானம், ஜனநாயகம், பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்படுத்த அவுஸ்திரேலியா ஆதரவளிக்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையுனடான இரு தரப்பு குறித்த கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நேரத்தில் இலங்கையை சர்வதேசம் தனிமைப்படுத்தக் கூடாது என பிஷப் தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment