Thursday, February 13, 2014
இலங்கை::இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை
உதவிகளை வழங்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மனித
உரிமை மீறல்ழகளினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு, மனித உரிமைப் பேரவை
அமர்வுகளின் போது நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென
கோரியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ம் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது
குடும்பத்தினருக்கும் நியாயம் வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத்
தெரிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கப்படையினரும் புலிகளும் மேற்கொண்டதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தும் முனைப்புக்களை அரசாங்கம் முடக்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
மனிதாபிமானத்திற்கு எதிராகவும், யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரையில் உரிய பதில் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் அரசாங்கம் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியமை, சட்ட விரோதகடத்தல், கொலை, காணாமல் போதல், புலிகளின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களுக்கு உணவு மருந்து வகைகளை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு குற்றசசாட்டுக்கள் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டள்ளதாகவம், அவை தொடர்பில் ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் மீது பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, கொலை செய்தமை, சிறுவர் போராளிகளை படையில் இணைத்துக் கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தள்ளது.
ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என வலியுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment