Friday, February 21, 2014

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலை விவகாரம்: காங்.-அதிமுக கடும் வாக்குவாதம்!

Friday, February 21, 2014
புதுடெல்லி::ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு தொடர்பாக மக்களவையில் நேற்று காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இந்தப் பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் நிருபம்,உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்.
 
தமிழக அரசு செய்தது முழுக்க முழுக்க அநீதியாகும். குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை முழுமையாக அனுபவித்தே தீரவேண்டும் என்றார்.
 
உறுப்பினர் சஞ்சய் நிருபத்தின்இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், சஞ்சய் நிருபம் முன்பு குவிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் அரசியல் ஏதுமில்லை என்று கூறி, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக சாடினர்.
 
இதனிடையே, பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்களும், வேறு சில பிரச்சினைகளில் சமாஜ்வாதி
 
உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதியில் கூடி கோஷமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து, சுமார் 90 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், அதிமுக உறுப்பினர்கள், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவை ஆதரித்து பேனர்கள் ஏந்தி நின்றனர்.

No comments:

Post a Comment