Thursday, February 20, 2014

ராஜீவ்காந்தி கொல்லையாளிகள் 7 பேர் விடுதலை: முதல்வருக்கு சென்னை மாநகராட்சி பாராட்டு!

 Thursday, February 20, 2014 
சென்னை::ராஜீவ்காந்தி கொல்லையாளிகள் பேரரிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையானதற்காக நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி பாராட்டு தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவை முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி   கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும்  விடுதலை செய்யலாம்   என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், 
மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால்  இந்திய அரசமைப்புச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு  அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி  சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா  தனது  மனிதநேய தாய் உள்ளத்தோடு  தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்கள். இதன் மூலம் உலக தமிழ் மக்களின் ஒளிவிளக்காய், நம்பிக்கை நட்சத்
 
திரமாய், களங்கரை விளக்கமாய் திகழும் முதல்வர் ஜெயலலிதா இந்த மாமன்றம் தனது  பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. 

No comments:

Post a Comment