Pages

Thursday, February 20, 2014

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Thursday, February 20, 2014
புதுதில்லி::ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள்  தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்பு வழங்கியதை அடுத்து அவர்களை விடுதலை செய்வது பற்றி மாநில அரசு முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
 
இதையடுத்து தமிழக அமைச்சரவை நேற்று அவர்கள் 7 பேரையும் விடுவிக்க முடிவு செய்து சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசின் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் 3 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும் என்றும் 3 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment