Monday, February 17, 2014
இலங்கை::வடக்கில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ். குடாநாட்டிற்கான 3ம் அமர்வு நேற்றையதினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், 54 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்றைய அமர்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 மணி வரையில் நடைபெற்றிருந்தது. இதற்காக 67 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், 54 பேர் அமர்வில் சாட்சியமளித்திருந்தனர். மேலும், புதிய பதிவுகள் 241 எடுக்கப்பட்டு மற்றொரு தினத்தில் அவர்களுக்கான விசாரணை அமர்வினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2009ம் ஆண்டு காணாமல் போனவர்கள் பற்றிய சில முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
நாளைய 4ம் அமர்வில் கொழும்புத்துறை மேற்கு, கொழும்புத்துறை கிழக்கு மற்றும் சுண்டுக்குழி தெற்கு, சுண்டுக்குழி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியம் வழங்க உள்ளனர்.

No comments:
Post a Comment