Tuesday, February 11, 2014
இலங்கை::ஏ-9 வீதியில் மாங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் 5 பயணிகள் பலியானதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
யாழ். கொழும்பு சேவையில் ஈடுபட்டிருந்த வேன் ஒன்று லாரி ஒன்றை முந்திச் செல்வதற்கு முற்பட்ட போதே இந்தக் கோர விபத்து இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேனில் பயணம் செய்தவர்களில் 5 பயணிகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாக முதலில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் வேனும் மிகவும் மோசமாகச் சேதமடைந்திருக்கின்றது.

No comments:
Post a Comment