Tuesday, February 18, 2014

ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்கு ரத்து ஆயுள் தண்டனையாக குறைப்பு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!!!

Tuesday, February 18, 2014
புதுடில்லி::ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
 
கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.
இதற்கிடையில் மூன்று பேரும், கடந்த, 2000ல், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டன. தங்களின் கருணை மனுக்கள், தாமதமாக பரிசீலிக்கப்பட்டடு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். சிறையில் எங்களின் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே எங்களின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவர்களின் தண்டனை குறைக்க கூடாது என்றும், இந்த வழக்கு நடத்தும் சூழலுக்கு தமிழகம் ஏற்றதல்ல. இதனால் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் இந்த கொலையாளிகள் மனுவை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் எனஅறிவித்தனர்.
 
கொடூர குற்றவாளிகள் :


இதன்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் தரப்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல. இவர்கள் சிறையில் எவ்வித கவலையும் பட்டதில்லை என்றும் மத்திய அரசில் வாதிடப்பட்டது. மேலும் ஜனாதிபதி, ஆட்சி மாற்றம் காரணமாக இது போன்று தாமதம் ஏற்பட்டது. இதனை ஏற்று கொடூர குற்றவாளிகள் தண்டனையை குறைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருணை மனு மீதான அறிவிப்பு தாமதம் ஏற்று சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளான மீசைமாதையன், பிலவேந்திரன், சைமன், உள்பட 15 பேர் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டது. இது போன்றே ராஜிவ் குற்றவாளிகள் தண்டனையையும் குறைக்கப்படும் என்று புலி ஆதரவு அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஒரு தேச பிரதமரை கொலை செய்த கொடூர குற்றவாளிகளுக்கு இந்திய சட்டப்படி பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்றும், விடுவித்தால் நாட்டில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் , இது இந்திய நீதி மன்றங்கள் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்றும் தேச பற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானிய மக்கள் ஒரு கொடூரத்தினால் பாதிக்கப்பட்டால் அவனுக்கும், அவனை சார்ந்த குடும்பத்தினருக்கும் எப்படி நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.
 
 
தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது என்ன ?
 
தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சன்கோகை, சிவகீர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது உத்தரவில்; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதத்தை ஏற்க முடியாது. இவர்களின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தூக்கு தண்டனை பெற்றவர்கள் மனநிலை அனைவருக்கும் தெரியும். குற்றவாளிகள் கருணை மனு மீதான நடவடிக்கையில் காலதாமதம் ஏற்கப்படுகிறது. இது போன்ற காலதாமதத்தை எதிர்காலத்தில் இல்லாமல் இருக்க போதிய சட்டநடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்படாது என நம்புகிறோம். மத்திய அரசு ஜனாதிபதியிடம் கருணை மனு மீதான முடிவு எடுப்பதில் காலக்கெடு விதிக்க வேண்டும். இந்த 3பேர்களின் தூக்கை ஆயுளாக குறைக்கின்றோம். தேவைப்பட்டால் 3 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்தும் மத்திய , மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் செக்ஷன் 432 படி முடிவு எடுத்து கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 
 
விடுதலையானால் இரட்டிப்பு மகிழ்ச்சி:
 
இது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில், 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.முக., காலத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக தியாகு, நளினி, கலியபெருமாள் விடுவிக்கப்பட்டனர். தற்போது இந்த 3 பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே இந்த 3 பேரும் அநுபவித்த சிறைத்தண்டனையை கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மூன்று பேரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்,' என்றார்.
 
 
நல்ல உள்ளங்களுக்கு நன்றி:
 
பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எனது மகனுக்காக நான் வீதி, வீதியாக அலைந்திருக்கிறேன். பல நாள் தீர்ப்புகளால் நான் ஏமாந்து போயிருக்கிறேன்.இந்த கொலைக்கும் எனது மகனுக்கும் சம்பந்தம் கிடையாது. நான் காலை முதல் இந்த தீர்ப்புக்காக பட, படப்புடன் காத்திருந்தேன், எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் எனது மகன். இவனது தண்டனை குறைப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் முதல்வர் ஜெ., அம்மா எனது மகனை விடுதலை செய்வார் என நம்புகிறேன். இவ்வாறு அற்புதம் கூறினார்.
 
நிரபராதிகளை விடுதலை செய்யுங்கள்: வைகோ :
 
இந்த தீர்ப்பு அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். எந்த குற்றமும் செய்யாத 3பேரும் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க நாள். அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வித குற்றமும் செய்யாமல் 23 ஆண்டு சிறையில் இருந்து வந்தவர். ராம்ஜெத்மலானியின் வாதம் காரணமாக இந்த வெற்றி கிட்டியுள்ளது. இவருக்கும் நன்றி . மரணத்தண்டனை சட்டம் இருக்கின்ற நாடுகளை விட மரணத்தண்டனை இல்லாத நாட்டில் உள்ள குற்றம் குறைவு என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
' ராஜிவ்'- கொலையுதிர் காலம்
 
1991 மே 21: ஸ்ரீபெரும்புதூரில், தாணு எனும் மனித வெடிகுண்டால், ராஜிவ் கொலை.
1991 ஜூன் 14: முதல் குற்றவாளியாக நளினியும், அவரது கணவர் முருகனும் கைது.
1991 ஆக., 29: கடைசி குற்றவாளியாக ரங்கன் கைது.
1992 மே 20: கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.
1993 நவ., 24: குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு தாக்கல்.
1994 ஜன., 19: புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு, சாட்சிகளிடம் விசாரணை.
1998 ஜன., 28: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
1999 அக்., 17: தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விண்ணப்பித்த கருணை மனு, கவர்னரால் நிராகரிப்பு.
2000: நளினியின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைப்பு.
2000 ஏப்., 26: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஜனாதிபதிக்கு கருணை மனு.
2006- 2009: கருணைமனு மீதான பரிசீலனை தாமதமானதால், 4 முறை நினைவூட்டல் கடிதம்.
2011 ஆக., 26: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், கருணை மனுவை நிராகரித்தார்.
2011 ஆக., 30: தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி, சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம்.
2011 செப்., 9: மூவருக்கும் தூக்கு நிறைவேற்ற குறிக்கப்பட்ட தேதி. போராட்டம் மற்றும் சட்டசபை தீர்மானத்தால், தூக்கு தண்டனை நிறைவேறவில்லை.
2014 பிப்., 18: ( இன்று ) தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------comments -dm-mr!!
 
தண்டனை குறையும்போது நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கும்!
 
தமிழ்நாட்டில் வந்து அப்பாவி 15 தமிழர்களை கொன்ற இவர்களை ஆதரிக்கும் நபர்கள், அந்த அப்பாவி 15 தமிழகளின் பற்றி கவலை படாமல் இருப்பது ஏனோ ? இந்த கொலையாளிகள் பற்றி ஆதரவாய் எழுதினால் , இலங்கை தமிழர்கள் உங்களுக்கு பணம் தருவார்கள். . அந்த அப்பாவி தமிழர்களின் குடும்பத்தினர் எல்லாம் ஏழைகள், அவர்களால் உங்களுக்கு பணம் தர முடியாது......
 
 ராஜீவ்காந்தி உட்பட வெடி வைத்து சிதறப்பட்ட அந்த 15 அப்பாவி தமிழ்கள் உயிர்களை பற்றி கவலை பட தமிழ்நாட்டில் யாரும் இல்லையா ? .......
 
அன்னிய நாட்டை சேர்ந்த ஒரு புலி பயங்கரவாத இயக்கம், நம் நாட்டைச்சேர்ந்த தேசத்துரோகிகளின் உதவியுடன், நம் நாட்டின் முன்னாள் பிரதமரை, நமது மண்ணிலேயே வைத்து படுகொலை செய்வதை ஏற்கவே முடியாது..... அரசியல் ரீதியாக ஒருவரை எதிர்க்கமுடியாவிட்டால் , அவரைகொன்றுவிடுவது என்று நினைக்கும் பயங்கரவாதிகளுக்கெல்லாம் ஜனநாயக நாட்டில் இடமில்லை.....
 
இவர்களுக்கு தண்டனையை குறைத்துள்ளார்கலே தவிர நிரபராதி என வைகோ எந்த விதத்தில் கூறுகிறார்? முட்டாள்தனத்திற்கு எல்லையே இல்லையா?........
 
குண்டு வெடிப்பில் இறந்த பல அப்பாவி உயிர்களை விட, கொலைக்கு உதவிய இவர்கள் விடுதலை ஆவது முக்கியம் ஆகிவிட்டது. தமிழர்கள் எண்ணம் பாகிஸ்தான் போல ஆகிவிட்டது ....இது நிச்சியம் தீவிரவாதத்தை பல தமிழர்கள் மனதில் விதைக்கும். ............
 
ஸ்ரீபெரும்பதூரில் என் சகோதரியின் கணவன் கொல்ல பட்டார். ராஜீவ் காந்தி மீட்டிங் பார்க்க சென்ற என் சகோதரியின் கணவன் என்ன பாவம் செய்தார். . அப்போது என் சகோதரி 4 மாதம் கரூற்று இருந்தாள். என் சகோதரி தன கணவனை பறி கொடுத்தாள். அந்த சம்பவத்திற்கு பிறகு என் சகோதரி மன நிலை பாதிக்க பட்டாள். என் சகோதரியின் மகள் தான் பிறக்கும் முன்பே தந்தையை இழந்தால். இவர்களுக்கு தூக்கு தண்டனை ரத்து சரியானது அல்ல. மக்களே உங்கள் குடும்பத்தில் யாராவது இப்படி வெடி வைத்து கொல்லப்பட்டு இருந்தால் இந்த தீர்ப்பை வரவேற்பீர்களா ?.....
 
மனிதாபமான அடிப்படையில் இது நல்ல தீர்ப்பு. ஆனால் தார்மீக அடிப்படையில் ஏற்புடையது அல்ல. டெல்லியில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும் நாடே அதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஆனால் ஒரு நாட்டின் பிரதமரும் அவரோடு பலரும் கொல்லப்பட காரணமாக இருந்தவர்களை தூக்கில் போட கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது விந்தையாக உள்ளது..................
 

No comments:

Post a Comment