Pages

Sunday, January 5, 2014

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திணைக்களம் அங்குரார்ப்பணத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் வழிபாடுகள்!

Sunday, 05, January, 2014
இலங்கை::வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திணைக்களம் வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

அந்த வகையில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலக விநாயகர் ஆலயத்தில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டககளப்பு சமுர்த்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட சமுர்த்திப் பிரதிப்பணிப்பாளர் பி.குணரெட்ணம், மாவட்ட சமுர்த்தி இணைப்பளர் ஜே.எஸ்.மனோகிதராஜா, சமுர்த்தி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment