Pages

Wednesday, January 8, 2014

தனித் தமிழீழத்தை விக்னேஸ்வரன் கைவிடவில்லை: அவரது கருத்து அதனை உறுதிப்படுத்துகின்றது: வசந்த பண்­டார!

Wednesday, January 08, 2014
இலங்கை::ஒற்­றை­யாட்­சியை கைவிட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யென்ற முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் கருத்­தா­னது, தனித் தமி­ழீழக் கொள்­கையை இன்­னமும் இவர்கள் கைவி­ட­வில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தென, தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார தெரி­வித்தார்.
வடக்கு ஆளு­நரை வெளி­யேற்றும் வரை மத்­திய அர­சுடன் வட­மா­காண சபை மித­வா­தப்­போக்­கினை கடை­பி­டிக்­கு­மென்று அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில் கூறியதாவது:
“நாட்டின் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு மாற்­றப்­பட வேண்­டு­மென்ற விவாதம் பல்­வேறு தரப்­பு­களால் மேலெழுப்பப்பட்டுள்­ளது. ஆனால், இதனை பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­திற்கு உள்ள மூன்­றி­ல் இ­ரண்டு பெரும்பான்மையை வைத்து செய்­து­விட முடி­யாது.
 
மாறாக, மக்கள் கருத்துக்கணிப்பு வாக்­கெ­டுப்பு நடத்தப்பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதன்­போது, நிச்­சயம் பெரும்பான்மை இனத்­த­வரின் அபி­லா­ஷை­க­ளுக்­க­மை­யவே புதிய அர­சி­ய­ல­மைப்­பு­க­ளுக்கு ஆத­ரவு கிடைக்கும். அது ஒற்றை­யாட்­சியை ஆத­ரிப்­ப­தா­கவே அமையும்.
 
ஒற்­றை­யாட்­சிக்குள், பிள­வு­ப­டாத நாட்­டுக்குள், அதி­காரப்பர­வ­லாக்­கலை ஏற்­றுக்­கொள்­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால், இன்று கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் ஒற்­றை­யாட்சி கைவி­டப்­பட்ட அதிகாரப்பரவலாக்கலுட­னான புதிய அர­சி­ய­ல­மைப்பே தேவை­ என்­கிறார்.
அப்­ப­டி­யானால் இதன் உள்­நோக்கம்தான் என்ன? கூட்­ட­மைப்­பினர் இன்­னமும் தமி­ழீ­ழக் கொள்­கையை கைவி­ட­வில்­லை என்­பதே ஆகும்.
 
எதிர்­கா­லத்தில் எப்­ப­டி­யா­வது தனித் தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கு­வதே இவர்­க­ளது ஒரே இலக்காக இருக்­கின்­ற­தென்­பதை முதல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­கா­ரங்­களை பர­வ­லாக்க முடியும். அதன் கீழேயே நாடு பிரி­யாது பாது­காக்­கப்­படும். நாட்டின் ஒற்­று­மையை விரும்­பா­த­வர்­களே ஒற்­றை­யாட்­சியை எதிர்க்கின்றனர்.
 
இவ்­வா­றான நிலைப்­பா­டுகள் தலை­தூக்கும்போது, எவ்­வாறு இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை, நம்­பிக்­கையை ஏற்படுத்த முடியும். தமி­ழீழ இலக்கை அடைய தடை­யாகி இருப்­பவர் வட­மா­காண ஆளுநர். எனவே, ஆளுநரை வெளியேற்றிக் கொள்வதற்காக, ஜனாதிபதியுடன் முதலமைச்சர் மிதவாதப்போக்கை கடைப்பிடிக்கின்றார். அதன் பின்னர் மத்திய அரசுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழ இலக்கை நோக்கிப் பயணிப்பது நிச்சயமாகும்” எனவும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment