Monday,January, 20, 2014
இலங்கை::ஓய்வுபெறவுள்ள விமானப் படை தளபதி எயார்
மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக
நியமிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
விமானப் படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம பெப்ரவரி 28ஆம்
திகதியுடன் ஒய்வுபெறவுள்ளார். இதன் பின் இந்தியாவுக்கான இலங்கை உயர்
ஸ்தானிகராக இவர் நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக கடமையாற்றும் பிரசாத்
காரியவசம், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக
கடமையாற்றிய ஜாலிய விக்ரமசூரிய கனடாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக
நியமிகிகப்பட்டு இருந்தார். எனினும், ஜாலியவின் நியமனம் குறித்த அறிவித்தலை
கனேடிய அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.
இதேவேளை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்த கடந்த வெள்ளிக்கிழமை
ஓய்வுபெற்ற கருணாதிலக அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக
நியமிக்கப்படவுள்ள தாக அரசாங்க தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment