Monday, January 06, 2014
இலங்கை::கண்டி போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கைதிகள் தமது பேராட்டத்தை கைவிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை
ஆரம்பித்ததையடுத்து, கண்டி போகம்பரை சிறைச்சாலையின் கூரையின் மேலேறி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகளில் 8
பேர் கூரையிலிருந்து சற்றுமுன்னர் இறங்கியதாக சிறைச்சாலை தகவல்கள்
தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment