Pages

Tuesday, January 21, 2014

வட மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு திடீர் விஜயம்!

Tuesday, January 21, 2014
இலங்கை::20-01-2014 திங்கள் நண்பகல் 12 மணியளவில், யாழ். கைதடியில் உள்ள வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் 

பா.டெனிஸ்வரன் அவர்களும், அமைச்சின் செயலாளர் R. வரதீஸ்வரன் அவர்களும் திணைக்கள உத்தியோகஸ்தர்களை சந்தித்து அவர்களுடன் கிராமங்களின் அபிவிருத்திகள் தொடர்பாகவும், ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். விரைவில் ஐந்து மாவட்டங்களுக்கும் கிராம அபிவிருத்தி தொடர்பான பயணம் மேற்கொண்டு கிராம மட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment