Pages

Tuesday, January 21, 2014

காணாமற்போனவர்கள் தொடர்பில் தகுந்த ஆதாரம் கிடைத்தால் படைகளை விசாரிக்கக் குழு விசேட சட்ட ஆணைக்குழு நிறுவப்படும்: பராக்கிரம பரணகம!

Tuesday, January 21, 2014
இலங்கை::இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பில் சரியான தகுந்த ஆதாரங்கள் உரியவர்களால் வெளிப்படுத்தப்படுமாக இருந்தால் , அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காகச் சுதந்திரமான விசேட சட்ட ஆணைக்குழு நிறுவப்படும் என்று காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார் .
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பான அமர்வின் முடிவில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் .
இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் உங்களுக்குக் கிடைத்துள்ளன . இது தொடர்பில் இராணுவத்தினரிடம் எவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகவியலாளர் ஒருவர் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேள்வி எழுப்பினார் .
 
இதற்குப் பதிலளித்த தலைவர் பராக்கிரம பரணகம , இது தொடர்பில் நாம் இராணுவத்தினரிடம் விசாரணைகளை முன்னெடுப்போம் . குறித்த காலப் பகுதியில் அங்குள்ள இராணுவ முகாமில் கடமையாற்றிய அதிகாரி யார் ? மற்றும் படை வீரர்கள் யார் ? என்பது தொடர்பில் விசாரணைகளைச் செய்வோம் .
 
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தினரும் இது தொடர்பில் சட்டரீதியாக ஆராய்வார்கள் . சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் உரிய முறையில் வெளிப்படுத்தப்படு மாக இருந்தால் யார் அந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்பதை அறிய முடியும் .
 
அவர்களுக்கு எதிராகச் சட்டமாக அதிபர் திணைக்களத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்படும் . அத்தகைய குற்றவாளிக ளைப் பற்றி விசாரிப்பதற்காக விசேட சட்ட ஆணைக்குழு நிறுவப்படும் .அது யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாகச் செயற்படும் என்றார் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம.

No comments:

Post a Comment