Pages

Friday, January 10, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு கீழுள்ள வலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி!

ss1059
Friday, January 10, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு கீழுள்ள வலி கிழக்கு பிரதேச சபையின்
வரவு - செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட போதும் , 3 மேலதிக வாக்குகளால் மீண்டும் தோல்வியடைந்தது .
 
வலி கிழக்கு பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு - . செலவுத்திட்டத்தினை தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் சபையில் இன்று  இரண்டாவது தடவையாகச் சமர்ப்பித்து , வாசித்துக் காட்டினார் . இதன்போது , பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன்ரைன் ஜக்சீலும் உடனிருந்தார் .
 
இந்நிலையில் , முதலாவது முறை கொண்டுவரப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தினை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு வந்தமை , மற்றும் சபை உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்படவில்லையென சபை உறுப்பினர்களுடையே வாதவிவாதம் இடம்பெற்றது .
21 உறுப்பினர்களை கொண்ட வலி . கிழக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 16 பேரும் , ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவரும் இருக்கின்றனர் .
 
தொடர்ந்து வரவு - செலவுத்திட்டம் வாக்கெடுக்குப்புக்கு விடப்பட்டபோது , 21 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் எதிராகவும் , 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களிக்க வரவு - செலவுத்திட்டம் 3 வாக்குகளால் தோல்வியடைந்தது .
 
ஏற்கனவே கடந்த 2013 நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு - செலவுத்திட்டத்தில் 10 உறுப்பினர்கள் எதிராகவும் , 9 உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும் வாக்களிக்க ஒரு வாக்குகளால் தோல்வியடைந்திருந்தது . முதலாவது வாக்கெடுப்பின் போது இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை .
 
உள்ளுராட்சிச் சட்டங்களுக்கு அமைவாக வரவு - செலவுத்திட்டம் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் .

No comments:

Post a Comment