Thursday, January 9, 2014

பாதுகாப்பு செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களைத் திறந்து வைத்தார்!

Thursday, January 09, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்திற்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள்   புதிதாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களைத் திறந்து வைத்துள்ளார்.
இதற்கமைய நேற்று காலை விசேட விமானம் மூலமாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், இராணுவ நிலைமைகளையும் பார்வையிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாகப்பு செயலாளர் ஏ9 வீதியின் மிருசுவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இராணுவத்தின் 52வது படைத் தலைமையகத்தையும் திறந்த வைத்தார்.
 
அத்தோடு, அங்குள்ள இராணுவ நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன், இராணுவத்தின் முகாம்களையும் பார்வையிட்டதுடன், குறித்த முகாம் தொடர்பாகவும், மாவட்டத்தின் ஏனைய நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இராணுவ பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட நெலும் பியச என்ற அரங்கத்தையும் பாதுகாப்புச் செயாலாளர் திறந்து வைத்தார்.மற்றும் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டார்.
 
இதன்போது மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, இராணுவத் தளபதி தயா ரட்ணாயக்க மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment