Pages

Sunday, January 19, 2014

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் போன உறவுகள் கண்ணீர் மல்க சாட்சியம்!

Sunday,January,19, 2014
இலங்கை::எமது உயிராக இருக்கின்ற காணாமல் போண உறவுகளை மீட்டுத் தாருங்கள். எமது உயிரைத் தவிர வேறு எதுவும் எமக்கு வேண்டாம் என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் போன உறவுகள் கண்ணீர் மல்க கோரியுள்ளனர்.
 
காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன? அவர்கள் எங்கே?  அவர்களுக்கு என்ன நடந்தது. தற்போதும் அவர்கள் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறோம். ஆகவே, எமது உயிர்களை எங்களிடமே ஒப்படையுங்கள். இதனை விட வேறு ஒன்றும் எமக்கு வேண்டாம்.
 
இறுதிகட்டப் போரில் உறவினர்கள் காணாமல் போனார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவிடம் காணாமல் போனோரின் உறவினர்கள் மீண்டும் ஒருமுறை நேரடியாக சாட்சியமளித்துள்ளனர்.
 
கடந்த 1990ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குவின் விசாரணை கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுக்காலை 9.30 மணியளவில், ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பமானது.
 
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குவின் தலைவர் மேக்ஸ்வெல் பராக்ரம பரங்கம (Maxwell Parakrama Parangama), ஆணைக்குழவின் ஆணையாளர்களான சுரண்யனா வித்யவத்னே, மனோ ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை ஆரம்பமானது.
 
உறவுகளை மீட்டுத்தாருங்கள்
 
அரசாங்கத்தின் உதவிகள் நட்டஈடுகள் எதுவும் மக்குத்தேவையில்லை. காணாமல்போன உறவினர்களை மீட்டுத்தங்தாலே போதும். கடந்த ஐந்து வருடங்களாக எமது உறவினர்களைத்தேடி அலைகின்றோம். காலத்திற்கு காலம் ஒவ்வொரு விசாரணைக் குழுக்களை அமைத்து கொண்டிருக்கும் இந்த அரசாங்கம், எப்போது எமது உறவுகளை மீட்டத்தரப்போகின்றது.
 
உயிரோடுதான் உள்ளனர்
 
காணாமல் போன உங்கள் உறவினர்கள் உயிரோடுதான் உள்ளனர் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? என ஆணைக்குழிவன் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உறவினர்கள், ஆம் எமது பிள்ளைகள்(உறவினர்கள்) உயிரோடுதான் உள்ளனர். 100 நூறுவீதம் எமக்கு நம்பிக்கையுள்ளது. எமது உறவினர்கள் உயிரோடுதான் உள்ளனர்.
 
உடல்களை கொடுத்தனரா
 
இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை புலிகள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனரா என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பியபோது, தம்மிடம் கிடைத்த உடல்களை புலிகள் அவர்களின் உறவினர்களிடம் கொடுத்தனர் என உறவினர்கள் பதிலளித்தனர்.
 
நேற்று இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சமுகமளித்தவர்களில் பலர், தமது உறவினர்கள் கடந்த 2009ம் ஆண்டுதான் காணாமல்போனார்கள் என்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தனர்.
 
இவ்வாறு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற விசாரணையின்போது, காணாமல்போனவர்களின் உறவினர்கள் கண்ணீர்மல்க தமது உறவினர்களை மீடடுத்தருமாறு கோரிக்கை விடுத்ததோடு, நாம் உங்களிடம் கொடுப்பது படிவங்கள் அல்ல. உறவினர்களின் உயிர்கள் அவர்களை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் என மீண்டும் மீண்டும் உருக்கமாக கேட்டுக்கொண்டனர்.

No comments:

Post a Comment