Sunday, January 12, 2014

ராதிகாவினால் ஏமாற்றப்பட்ட புலம்பெயர் சமூகமும் எம்.பியும்!

Sunday, January 12, 2014
இலங்கை::இலங்கை வந்திருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்மணியும், கனடா பிரஜா வுரிமை பெற்ற அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினருமான ராதிகா சிற்சபேசன் குறித்த பேச்சையே கடந்த வாரம் முழுவதும் மக்கள் மத்தியி லும், ஊடகங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசாங் கத்திற்கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்தவென புலம்பெ யர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தவரால் திட்டமிட்டு அனுப்பிவைக்கப் பட்டவர்கள் வரிசையில் முன்னர் கவிஞர் ஜெயபாலன் பின்னர் மகாதமிழ் பிரபாகரன் இப்போது ராதிகா என்பதாக தொடர்கிறது.


சுற்றுலா விஸாவில் ஒரு நாட்டிற்குச் சென்றால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாதவர்கள் இல்லை இவர்கள். ஆனால் மூவ ருமே அதனை மீறிச் செயற்பட்டுள்ளனர். தம்மை இராணுவத்தினரோ, பொலிஸாரோ கைது செய்ய வேண்டும், அதனை ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்க வேண்டும், அதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமைப்புக்கள் சில அறிக்கை விட வேண்டும், அதனை வைத்து ஐ.நா வில் இலங்கை மீது கேள்வி கேட்கப்பட வேண்டும்.


இதுவே இவர்களது திட்டம். இதற்காகவே புலம்பெயர்ந்து வாழும் புலி சார்பு அமைப்புக்கள் இவர்களுக்கு விமானப் பயணச்சீட்டும் வழங்கி கைச் செலவிற்குப் பணமும் கொடுத்து இவர்களை இங்கு அனுப்பி வைக் கின்றது. கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விஸாவில் இங்கு வந்தார், தன் னைக் கைது செய்வார்கள் எனத் தெரிந்த விடயங்களில் அதிக நாட்டம் செலுத்தி, கைதாகி அனுப்பி வைத்தவர்களது ஆசையைப் பூர்த்தி செய்தார். அதேபோன்று சுற்றுலா விஸாவில் மகாதமிழ் பிரபாகரன் வந்தார், தன்னைக் கைது செய்வதற்காகவே வேண்டுமென்று இராணுவ அரண் களைப் படம் பிடித்தார். அனுப்பி வைத்தவர்களது தேவையை நிறை வேற்றினார்.


இறுதியாக ராதிகா வந்தார், ஆனால் அவரால் அனுப்பி வைத்தவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவர் தன்னை அனுப்பி வைத்த புலம்பெயர் சமூகத்தவரையும் இங்கு அவர்களுக்கு ஏஜென்டாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் ஏமாற்றிவிட்டார். அவ ருக்கு சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தது போன்று நடிக்கத் தெரியவில்லை. மாறாக தான் பிறந்த தாய் மண்ணையும், தாய் நாட்டையும் அவர் நேசித்தார். உண்மையை அறிய வந்தவருக்கு இங்குள்ள உண்மை நிலை புரிந்து விட்டது. பொய்யுரைக்க அவர் விரும்பவில்லை. அதுவே உண்மை.


இலங்கையில் தான் கைது செய்யப்பட்டால் அது கனடாவில் தனக்கு அடுத்த தேர்தல் வெற்றிக்கு இலகுவாக அமைந்துவிடும் எனச் சிலர் கூறிய ஆசை வார்த்தை அவருக்கு அரசியல்வாதி என்ற வகையில் மகிழ் வைத் தந்திருந்தாலும் இங்கு வந்து உண்மையை அறிந்ததும் அவர் அதனை விரும்பவில்லை. தான் சுற்றுலா விஸாவில் வந்ததனையும், அதனை மீறிச் செயற்படுவதை விரும்பாததையும் அவர் ஊடகவியலாளர் களை ஆரம்பம் முதல் தவிர்த்து வந்ததிலிருந்து உணரக் கூடியதாக இருந்தது.


அவர் தங்கியிருந்த வெள்ளவத்தை ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் காலை முதல் மாலை வரை காத்திருந்த மற்றும் அவர் சென்ற புடவைக் கடை முதல் நகைக்கடை வரை பின் தொடர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அவர் தனது விஜயம் தனிப்பட்ட விஜயம் என்று கூறக் காரணம் வடக்கில் அவர் கண்ட மக்களது இயல்பான வாழ்க்கை முறையும், அப்பகுதி கண்டு வரும் பாரிய அபிவிருத்தியுமே ஆகும். இதனை அவர் தனது கண்களா லேயே பார்த்தமையால் வடக்கில் கூடவிருந்து பொய்யுரைத்த உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரது கதைகளுக்கு இவர் செவிமடுக்கவில்லை.


இலங்கையில் தமிழ் மக்கள் மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுக்கிறார்கள், அம்மக்கள் படையினரால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்றெல்லாம் பொய்யுரைக்கப்பட்டு தன்னை அனுப்பி வைத்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தவரையும், இங்கு தன்னைக் கைது செய்வதை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தப் பாராளுமன்ற உறுப்பி னரையும் ராதிகா நிச்சயம் நொந்து கொண்டிருப்பார். தன்னை வைத்துக் காரியம் சாதிக்க முனைந்தவர்களுக்கு அவர் தக்க பாடம் புகட்டியி ருக்கிறார்.


பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கனடா பங்குபற்றக் கூடாது எனத் தான் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியது எத்தகைய பாரிய தவறு என்பதை ராதிகா நிச்சயம் உணர்ந்து கொண்டிருப்பார். இதனை அவரது இலங்கை விஜயத்தின் இறுதி நேரத்தில் நன்கு உணர முடிந்தது. பயண நிறைவில் அவர் விமான நிலையம் சென்றிருந்தபோது பலவித பகீரத முயற்சிகளுக்கு மத்தியில் ஒருவாறு தன்னைச் சந்தித்த ஓர் உள்ளூர் மாநகர அரசியல்வாதியிடம் அவர் மனந்திறந்து உண்மையான சில விடயங்களைக் கூறியிருக்கிறார்.


ஆனால் அந்த அரசியல்வாதி வழமைபோன்று இல்லையென விவாதிக்க ஏன் இப்படி எதிர்ப்பு அரசியல் செய்கிaர்கள், அரசாங்கத்துடன் இணைந்து சென்று காரியம் சாதிக்கப்பாருங்கள் எனக் கூறியிருக்கிறார். இதிலிருந்து ராதிகா இதுவரை காலமும் கனடாவில் பிறரது ஏவலுக்கே அரசியல் செய்திருப்பதை உணரமுடிகிறது.


ராதிகாவின் விஜயம் தவறானது எனச் சிலர் கூறினாலும் அதில் பல நன்மைகள் புதையுண்டிருப்பதைப் பலராலும் உணர முடிகிறது. கனடா தான் விட்ட தவறை இதே ராதிகா மூலமாகப் புரிந்து கொள்ளும் காலம் விரைவிலேயே வரும்.

No comments:

Post a Comment