Pages

Wednesday, January 15, 2014

இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டைம மீள்பரிசீலனை செய்யவேண்டும்: ரவூப் ஹக்கீம்!

Wednesday, January 15, 2014
இலங்கை::இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டைம மீள்பரிசீலனை செய்யவேண்டுமென ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.
இலங்கை மீதான விமர்சனங்களைத் தவிர்த்து நல்லிணக்கத்தை அடையும் முயற்சிக்கு அமெரிக்க உதவ வேண்டுமென நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.
 
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், அமெரிக்கா உள்ளடங்கலாக சர்வதேச நாடுகள் உண்மை கண்டறியும் ஆணைக்குழு போன்ற மாற்று பொறிமுறை ஒன்று குறித்து கவனம் செலுத்த வேண்டும். இதுவே நல்லிணக்கத்தை அடைவதற்கான ஆரம்பமாக இருக்கும்.
 
இலங்கை குறித்து முன்னர் கொண்டிருந்த கருத்தையே அமெரிக்கா இப்போதும் கொண்டுள்ளது. இதனையே அமெரிக்காவின் சர்வதேச போர்க்குற்ற நிபுணர் ரெப்பின் அண்மைய இலங்கைப் பயணமும் எடுத்துக்காட்டுகிறது.
 
போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்களைத் தோண்டி எடுக்க மட்டுமே இதுபோன்ற விஜயங்கள் அமையும். மாறான இணங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்த உதவாது.
 
சுதந்திரமான, நம்பகமான விசாரணை மூலம் மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வேண்டும். உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
 
ரெப்பின் அண்மைய இலங்கை வருகை  முரண்பாடுகள் தொடர்பாக ஆராயும் முகமாக மட்டும் அமையவில்லை. மாறாக இலங்கை மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதும் நீதி மற்றும் பொறுப்புக் கூறல் தன்மையினை உறுதிப்படுத்துவதாகவுமே அமைந்திருந்ததாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கூறியுள்ளது.
 
ரெப் தனது விஜயத்தின்போது இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தொடர் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதவுரிமைச் சட்ட மீறல்கள் உள்ளடங்களாக ஆலோசித்தும் கண்கண்ட சாட்சிகள் உள்ளிடவர்களிடம் கேட்டும் அறிந்துள்ளார்.
 
சுதந்திரமானதும் பொறுப்புக் கூறலுக்குமான கட்டப்பாட்டை வலியுறுத்தி நம்பத்தகுந்த விசாரணை ஒன்றை மேற்கொள்ள இலங்கையை ஊக்குவிப்பதும் இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தாகவும் தூதரகம் கூறியுள்ளது.
 
இலங்கை அரசுடன் இணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சிறந்ததொரு சமாதான சகவாழ்வை அனைத்து இலங்கை மக்களிடமும் ஏற்படுத்த பாடுபடுவோமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
அவ்வாறன நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதாகவே அமெரிக்காவின் செயற்பாடுகள் அமைய வேண்டும். அதனூடாகவே சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்பதும். சுபீட்சத்தை நோக்கி நாடு முன்னேற முடியும் என்றார்.

No comments:

Post a Comment