இலங்கை::நாடு நெருக்கடியை சந்தித்துள்ள சூழ்நிலையில் அரசாங்கம் தேர்தல்
நடத்துவதை கடுமையாக எதிர்ப்பதாகவும் இது புத்திசாதுரியமற்ற
செயல் எனவும் விமர்சிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்,
யுத்தக்குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக ஐ.நா.வில் குழுவொன்று
அமைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்கும் என்றும்
தெரிவித்தது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர்
டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், மார்ச் மாதம் ஐ.நா. மனித
உரிமை ஆணைக்குழு மாநாட்டில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு
அமெரிக்கா இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் அனைத்து
நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
எமக்கெதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வந்து இதனை நிறைவேற்றி யுத்தக்குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஐ.நா.வில் குழுவை நியமிப்பது நிச்சயமாகும். அதற்காகவே ஸ்டீபன் ரெப் இங்கு வந்து யுத்தக்குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்காக சாட்சியங்களை பெற்று சென்றுள்ளார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோர் அமெரிக்காவின் திட்டத்திற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு எமக்கெதிராக பிரேரணையை நிறைவேற்றி சர்வதேச விசாரணையை நியாயப்படுத்த அமெரிக்கா முயற்சிகளை முன்னெடுத்து வருகையில் அரசாங்கம் இதற்கு முகம் கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகளையும் மக்களையும் ஓரணியில் இணைத்து சர்வதேச சதிகளுக்கு முகம்கொடுத்து அத னை தோல்வியடையச் செய்வதற்கு தயாராகாமல் மேல் மாகாண சபை மற்றும் தென்மாகாண சபை தேர்தலை நடத்தப் போகின்றது என்றார்.
இது புத்திசாதுரியமற்ற செயலாகும். எனவே அரசாங்கத்தின் இம்முடிவை கடுமையாக எதிர்க்கின்றோம். இதன் மூலம் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்கள் மறந்துவிடுவார்கள். மக்களது அவதானம் அனைத்தும் தேர் தலை நோக்கியே இருக்கும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
No comments:
Post a Comment