Friday, January 03, 2014
இலங்கை::யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிசாருக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் புதிய தமிழ் தெரிந்த பொலிசார் கடமையாற்றுகின்றார்கள் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகாரோ தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் இன்று பகல் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிசார் கடமையாற்றவது சம்பந்தமான கேள்வியை எழுப்பினார் .
இதற்கு பதிலளித்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக தமிழில் டிப்ளோமா பெற்ற சிங்கள பொலிசார் தற்போது இடம் பெற்ற இடமாற்றத்தின் போது யாழ் மாவட்டத்திறக்கு வந்துள்ளார்கள் .
இவர்கள் மலைநாட்டில் இருந்து வந்துள்ளதுடன் தமிழ் பேசவும் கூடியவர்களாக இருக்கின்றார்கள் . இதனால் பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிசார் இல்லையென்ற நிலமை இல்லை பொலிஸ் நிலையங்களில் உள்ள தொலைபேசி இணைப்பு இடகளிலும் கூட தமிழ் சிங்கள பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளார்கள் .
சிங்கள பொலிசாருக்கும் கூட தமிழ் பொலிசார் வெளியில் சென்று இருந்தால் தமிழ் அழைப்புக்கள் வரும்வேளையில் அதனை ஈடுசெய்யும் வகையில் சொற்களை கூறும் வகையில் கற்பிக்கப்பட்டுள்ளது .
ஆகையினால் தமிழ் தெரிந்த பொலிசார் இல்லை பொலிஸ் நிலையங்களில் பொலிசார் பற்றாக்குறை என்பது போன்ற விடயங்கள் எதுவும் இல்லையென தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment