Saturday, January 4, 2014

பாஜ ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு!

Saturday, January 4, 2014!
சென்னை::துறைமுகம் பகுதியில் பாஜ அலுவலக திறப்பு விழா நேற்று கொத்தவால்சாவடி தாதா முத்தையப்பன் தெருவில் நேற்று நடந்தது. ஜெய்சங்கர் தலைமை வகித்தார். தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
 
இன்று பாஜவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் தங்களது பிரச்னை களை பாஜ மூலம் தீர்க்க முடியும் என நினைக்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் அரசு, திறமை இல்லாத அரசாக உள்ளது. இதனால், அண்டை நாடுகள் நம்மை பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது.

மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடும். மோடி பிரதமர் ஆவதற்கு தமிழக  மக்கள் தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment