Sunday, January 5, 2014

யாழ். மாவட்ட இராணுவத் தளபதி ஹத்துருசிங்க கொழும்பு தலைமையகத்துக்கு இடமாற்றம்- பலாலியில் பிரியாவிடை நிகழ்வு!

Sunday, 05, January, 2014
இலங்கை::யாழ். மாவட்ட இராணுவத் தளபதியான மகிந்த ஹத்துருசிங்க இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதனையிட்டு அவருக்கு நேற்று பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

2009ம் ஆண்டு முதல் கடந்த நான்கு வருடங்களாக மாவட்ட இராணுவத் தளபதியாகப் பதவி வகித்து வந்திருந்தார். இந்நிலையில், இந்த வருடம் முதல் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களையடுத்து மகிந்த ஹத்துருசிங்கவும் கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இராணுவத்தின் ஏற்பாட்டில் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்நது.
 
இதற்கமைய பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு, இந்த நிகழ்வில் ஈழத்தின் புரட்சிப் பாடகர் எஸ்.வீ.சாந்தனின் இன்னிசை கைச்சேரிகளும், இராணுவத்தின் பெண்கள் அணியினரின் குத்தாட்டமும் இடம்பெற்றது.

No comments:

Post a Comment