Pages

Thursday, January 2, 2014

(திவிநெகும) திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட உற்பத்திப் பொருள்கள் வெளிவர ஏற்பாடு!

Thursday, January 02, 2014
இலங்கை::வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான நிலையத்தினை ஒப்படைக்கும் நிகழ்வு  நேற்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உற்பத்திப் பொருள்கள் நாச்சியார் என்ற விசேட பெயரில் வெளிவருவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

அதன் அடிப்படையில் இதற்கான உற்பத்தி நிலையத்தினை மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைப்பதற்கான ஒப்பந்தம் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கும் காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தலைவிக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.
 
 
சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் 250 வறிய மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு!
 
2014 புத்தாண்டு விழாவை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பரிவிலுள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 250 வறிய மாணவ மாணவிகளுக்கு சுமார் 500 ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் 01-01-2014 இன்று புதன்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸினால் வறிய மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்ட்டன.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்ணம், கா-குடி பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாளர் ஈ.குணரட்ணம் , உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி முகாமையாளர் உட்பட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
 
இங்கு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 250 வறிய பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சுமார் 500 ரூபாய் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment