Saturday, January 18, 2014
இலங்கை::காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள்
தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த
விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
1990ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. நாளைய தினம் முதல் தடவையாக பொதுமக்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 11000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதல் கட்டமாக கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நான்கு அமர்வுகளில் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் 6014 பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment