Thursday, January 9, 2014

வட மாகாண அமைச்சு திணைக்கள செயலாளர்கள் சிலர் விரைவில் மாற்றம் -முதல்வரின் ஒப்புதலுக்காக ஆளுநர் பட்டியலை அனுப்பியுள்ளார்!

Thursday, January 09, 2014
இலங்கை::வட மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள் பலர், விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மாற்றம் செய்யப்படவுள்ள செயலாளர்களின் பெயர்களை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சிபாரிசுக்காக ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அனுப்பிவைத்துள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
முதலமைச்சரின் சிபாரிசின் பின்னர் மாற்றம் செய்யப்படவுள்ள செயலாளர்களின் விபரங்களை உத்தியோகப்பூர்வமாக ஆளுநர் அறிவிக்கவுள்ளார். வட
மாகாண சபை அமைச்சின் செயலாளர்கள் எதேச்சதிகாரமாக மாற்றப்படுவதாக முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தரப்பில் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.
 
இந்நிலையில், அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயம் குறித்தும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக தெரியவருகிறது.
 
இந்த நிலையிலேயே மாற்றம் செய்யப்படவுள்ள செயலாளர்களின் விபரங்கள் முதலமைச்சரின் சிபாரிசுக்காக ஆளுநரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


 

No comments:

Post a Comment