Pages

Wednesday, January 22, 2014

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையில் சமயங்களுக்கு இடையிலான நல்லுறவுக் கூட்டம்!

சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையில் சமயங்களுக்கு இடையிலான நல்லுறவுக் கூட்டம்:-
Wednesday, January 22, 2014
இலங்கை::
சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்றுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேரில் சென்று அழைர்ர் விடுத்துள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறும் கோரி உள்ளார்.

இவ்வாறே, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து,  எதிர்வரும்  28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இந்த கூட்டத்தை  ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் கூட்டம்  நடைபெறவுள்ளது.

இலங்கையில் சமய நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய வரைபைத் தயாரிக்க, முக்கியஸ்தர்களின் குழுவொன்றை தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம்  நியமித்துள்ளது.

இந்த குழுவில் சமய தலைவர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உள்ளிட்ட பல  தரப்பினர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment