Monday, January 6, 2014

இந்துக்கள், இந்து மதம் மற்றும் இந்து கடவுள்களை இழிவுபடுத்திய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:, திருப்பூரில் பா.ஜ., வினர் போலீசில் புகார்!

Monday, January 06, 2014
திருப்பூர்::இந்துக்கள், இந்து மதம் மற்றும் இந்து கடவுள்களை இழிவுபடுத்திய புலி ஆதரவு பினாமி
 
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, திருப்பூரில் பா.ஜ., வினர் போலீசில் புகார் அளித்தனர்.
பா.ஜ., மாநில இளைஞரணி பொருளாளர் கீர்த்தி கண்ணன் சார்பில், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கட்சியினர் நேற்று மனு அளித்தனர். அதில், இணைய தளம் ஒன்றில், செபாஸ்டியன் சைமன் எனப்படும் சீமான், பேச்சு இடம் பெற்றுள்ளது.
 
அதில், இந்து மதத்தையும், இந்து கடவுள்களான சிவன், ராமர், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களையும், அதை வழிபடும் இந்து மதத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார்.
 
இப்பேச்சு இந்து மதத்தை பின்பற்றுவோரை மிகவும் பாதிப்பதாக உள்ளது. இந்து மதத்தை இழிவுபடுத்தி, இந்து மதத்தினர் மனம் நோகும்படியும் விமர்சித்து பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மனுவை, அவரும், மாவட்ட பா.ஜ., தலைவர் மணி மற்றும் திரளான நிர்வாகிகள், வடக்கு உதவி கமிஷனர் ஜெயச்சந்திரனிடம் அளித்தனர். புகார் மீது விசாரணை நடத்த வடக்கு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

 

No comments:

Post a Comment