Pages

Thursday, January 16, 2014

இன்று காலை ஏழு மணி முதல் யாழ் போதனா வைத்திய சாலையின் சிற்றூழியர்கள் போராட்டம்!

Thursday, January 16, 2014  
இலங்கை::நாடாளாவியரீதியாக நடைபெறுகின்ற சிற்றூழியர்களின் போராட்டத்தில் யாழ் போதனா வைத்திய சாலையின் சிற்றூழியர்களும் இன்று காலை ஏழு மணிமுதல் மதியம் பண்ணிரண்டு மணிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
 
சிற்றூழியர்கள் மேற்கொண்டு வருகின்ற இந்தப் போராட்டத்தினால் வைத்திய சாலையின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சிற்றூழியர்கள் போராட்டத்தை கடந்த மாதம் ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் அரசு வழங்கிய உறுதி மொழிகளையடுத்து போராட்டம் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் அரசின் உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாதமையினால் சிற்றூழியர்கள் இன்று காலை முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment