Pages

Saturday, January 18, 2014

வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைப்பினர் ஜனாதிபதியை சந்திக்க முயற்சி!

Saturday, January 18, 2014
இலங்கை::வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியை சந்தித்து கோருவதற்கு வலி. வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமை
ப்பு தீர்மானித்துள்ளது.
 
எதிர்வரும் 19ம் தேதி யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில், அவரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு தமது அமைப்பு கோரியுள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைப்பின் தலைவரும், வலி. வடக்கு பிரதேச சபையின் உப தலைவருமான சஜீவன் தெரிவித்தார்.
 
இச்சந்திப்பின் போது இரு தசாப்தங்களுக்கு மேலாக வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைப்பதுடன், விரைவாக அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரப்படுமெனவும் சஜீவன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment