Pages

Monday, January 20, 2014

காணாமல் போன மற்றும் கொல்லப்பட்டவர்களை புலிகள் கடத்தியிருந்ததாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது!

காணாமல் போன மற்றும் கொல்லப்பட்டவர்களை புலிகள் கடத்தியதாக நிரூபிக்க TID  தீர்மானம் :Monday,January, 20, 2014
இலங்கை::2900 சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை  புலிகள் கடத்தியிருந்ததாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

வீடுகளிலிருந்து இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பலவந்தமான அடிப்படையில் கடத்திச் செல்லப்பட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தி உயிரிழந்த சிறுவர் இளைஞர் யுவதிகளின் பெற்றோருக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.இராணுவத்தினர் இந்த மனநல ஆலோசனைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

உயிரிழந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களை குடும்பத்தாருக்கு வழங்கவும், நட்ட ஈடாக 100,000 ரூபா வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

 

No comments:

Post a Comment