Sunday, 05, January, 2014
இலங்கை::இலங்கையின் மாணவர் படையணியின் பெண்களுக்கான மாணவர் படையணியில் இருந்து பங்களாதேசிற்கு பயிற்சிக்காக சென்ற மாணவர், படையணிக் குழுவில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவி சஸ்மிதா ஜெகதீஸ்வரன் இடம்பெற்று கடந்தவாரம் பயிற்சியினை நிறைவு செய்துள்ளார்.
இலங்கையில் மாணவர் படையணியுள்ள 45 பாடசாலைகளில் இருந்து 10 மாணவர்கள் இப்பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவியாக இவர் காணப்படுகின்றார்.
பங்களாதேசிற்கான மாணவர் படையணி பயிற்சியின் போது பங்களாதேசத்தின் பிரதமந்திரி, கடற்படை மாணவர் படையணி உறுப்பினர்கள் ஆகியோரை இவர் சந்தித்துள்ளார்.
இப்பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டமை தொடர்பாக சஸ்மிதா கருத்து தெரிவிக்கும்போது மாணவர் படையணியின் பயிற்சியானது நன்மையளித்ததுடன், தலைமைத்துவ ஆற்றல் பயம், கூச்சம் அற்ற நிலை, விடயங்களினை பொறுப்பெடுத்து செயற்படுகின்ற ஆற்றல் எல்லோரிடமும் சகயமாக பழகும் திறன் என்பவற்றினை பெற்க்கூடியதாக இருந்ததாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment